Posts mit dem Label வளத்தின்மீதான பெரு விருப்பாய் werden angezeigt. Alle Posts anzeigen
Posts mit dem Label வளத்தின்மீதான பெரு விருப்பாய் werden angezeigt. Alle Posts anzeigen

Samstag, 24. Januar 2009

தடமொன்று சிக்கியது

மீண்டு வரும் பொழுதொன்றில்
பொய் முகம் முறித்தெறியும்
தெருவொன்று துன்பத்துள்
திருப்பத்தில் எகிறும் எலும்புத் துண்டம்

மொய்த்திருக்கும் இலையான்களின்
குருதி நினைந்த கால்களில்
இந்த மிருகத்தின் தடமொன்று சிக்கியது
எரிந்த சாம்பலையும் அவை விட்டபாடில்லை!

கனத்த மிதப்பொன்றில்
கடுகுகளுக்குக் கால் முளைத்து
வளத்தின்மீதான பெரு விருப்பாய்
வன் பொழுதொன்றில் வர்ணமிடும் பொழிவுகள்
அமெரிக்க மாமாக்களின் நா நுனியில்.