துரோகமும்!
தொப்பி அளவானதாக இருக்கலாம்
அதற்காக முள்முடியைத் தரித்து
அழகு பாப்பவர்கள் தமது செயலை
மற்றவர்கள் தவறெனச் சுட்ட முடியுமா?
ஆரம்பமே துரோகம்
இதுள் புதிதாகவும் துரோமெனப் புடுங்க
புரட்சிக்கான எந்தப் புண்ணாக்கு
புலிகள் போராட்டத்தில் உண்டு?
ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி
இடை வழியில் குவளை ஏந்த
சமாதிகளுக்குப் பின்னால் ஒளிந்தபடி
மேலும் புதை குழிகள் குறித்துப் பாடம்
நடாத்துகிறது புரட்சிக் கோஷ்டி
நீ,கருவினிலேயே குறைப்பட்டுள்ளாய்
அறிந்தவர்கள் உனது தாயினது கற்பத்தில்
உன்னைக் குறித்துப் பேசியதெல்லாம்
தாய்க்கு ஒரு பிள்ளையே ஒழிய
உனது எதிர்காலம் குறித்து அல்ல
நிலாக் காலத்தை நீ தரிசிக்க
விழி உனக்கு இடந்தராதவொரு
அகண்ட விகாரத்தால் நீ மண் தடவிக்
கோலமிட்ட முற்றத்தை அழித்தெறியும்போது
நீ பொறுப்பில்லைதான் கேடு விளைவித்தவர்கள்
உனது முற்றத்தில் கோலம் போடுவதற்கு முன்
உன்னைக் குறித்துச் சிந்தித்து இருக்க
அவர்களது ஆசை இடங்கொடுக்கவில்லை
நீ,கும்மிருட்டில் உலகத்தைத் தரிசிக்கிறாய்
உனது மனமோ உறை பனி வலயத்தின்
கரடியாக அலையவில்லை உன்னை ஈன்றவர்கள்
அங்ஙனம் இருக்கக் கடவரென நீ
உரைப்பதுமட்டும் அவர்களுக்கு எங்ஙனம் கேட்கும்?
அவர்கள் உன்னைக் குறித்தே விசாரனை செய்யாது
தம்மைக் குறித்த உலக அளவுகோலை
நிறுவுவதில் காலத்தைக் கொலை செய்தனர்
உன்னைக் குறைப் பிரசவமாக்குவதற்கு முன்
அட்டைக் கத்தி கொண்ட சேனைகளோடு
கோட்டையைப் பிடிப்பதற்குக் கோவணம் கட்டி
கடல் கடந்து கரச் சேவையில் ஈடுபடலாயினர்
இருப்பதையும் பறித்தவர்கள் உனது சத்திரச் சிகிச்சைக்காக
பொன்னள்ளிக் கொடுத்தபோது அதில் தமது சுமைகளை
உனது முதுகினில் ஏற்ற நீ முதுகெலும்பைத் தானமாக்க நேர்ந்தது
எகலைவன் துரோணருக்காகக் கட்டைவிரலைக்
காணிக்கை செய்தபோது குருபக்தியே அவனுக்கு அதிகமானதாகச்
சொன்னவர்கள் அவனது ஆயுளைப் பறிக்க அவிட்ட
அதே கதையோடு உன்னையும் இன்று காவு கொள்கின்றனர்
உன்னைப் பெற்றவர்கள் உலகைக் கடந்து
ஏதோவொரு சந்தியில் சில்லறை பொறுக்க
இன்னும் குறைப் பிரசவங்களுக்கான கருக்களை
சுமப்பதற்கான விந்துக்களை அந்நியர்களின்
ஆண்மைக்குள் ஒப்பந்தஞ் செய்ய
அதையும் உனது அநுபவத்தைக் கடந்து
இன்றைய துரோகங் குறித்தக் கேள்வி
ஆரம்பமே துரோகமெனும்போது
புதிதாகவும் துரோகம் நீ கற்பனைக்குள்
உந்தித் தள்ளுவதும் புரட்சியென அவிழ்ப்பதும்
குறைப் பிரசவத்தின் கோலந்தன் அழிவை
கோட்பாட்டில் அச்செடுப்பதற்கான முயற்சிதாம்!
ஒன்றும் இல்லை,
எல்லோரும் அந்த வெள்ளத்தில்
அள்ளுப்பட உனக்கான வாழ்வு
அநாதையாக மயானம் நோக்கி...
ப.வி.ஸ்ரீரங்கன்
10.04.09
1 Kommentar:
திருச்சி வே.ஆனைமுத்து அவர்களால் பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் நூல் மூன்று தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டு, 01.07.1974 இல் அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் படிகள் விற்றுத் தீர்ந்தன. பல ஆண்டுகளாக அதன் படிகள் விற்பனைக்குக் கிடைக்கவில்லை. உலகு தழுவிய தமிழர்கள் இந்த நூலின் மறுபதிப்பு எப்பொழுது வெளிவரும் என்று ஆர்வமுடன் வினவியவண்ணம் இருந்தனர். அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தந்தை பெரியார் பல காலம் எழுதியும் பேசியும் வந்த செய்திகள் உரிய வகையில் தொகுக்கப்பட்டு 2010 பிப்பரவரியில் வெளியிடப்பட உள்ளன. முன் வெளியீட்டுத் திட்டத்தில் இந்த நூல்கள் வெளியிடப்படுவதால் குறைந்த விலையில் வாங்கிக்கொள்ள அரிய வாய்ப்பு. Periyar E.V.R.
தெமி 1/ 8 அளவிலான, 20 தொகுதிகளைக் கொண்ட (20 Volumes) இப்பெரும் தொகுப்பு முன்வெளியீட்டுத் திட்டத்தில் மிகவும் குறைந்த விலைக்குக் கிடைக்க உள்ளது. இத்தொகுப்பு உயரிய, அழகிய, தரமான பதிப்பாக அமைகிறது. 100 பக்கங்கள் முதல் 675 பக்கங்கள் வரையிலான தொகுப்புகளாக மொத்தம் 9000 பக்கங்களைக் கொண்டுள்ளது.
பெயர்க்குறிப்பு அடைவு, சொற்குறிப்பு அடைவு, அருஞ்சொற்பொருள் அகராதி, இன்றியமையாத அடிக்குறிப்புகள் தரப்பெற்றுள்ளன. நூலை வெளியிடுவோர் பெரியார் ஈ.வெ.இராமசாமி-நாகம்மை கல்வி,ஆராய்ச்சி அறக்கட்டளையினர் ஆவர்.
20 தொகுதிகளைக்கொண்ட 9000 பக்கம் கொண்டு இந்த நூலின் விற்பனை விலை 5,800 உருவா ஆகும். ஆனால் முன்பதிவுவிலையில் 3500 உருவாவுக்குக் கிடைக்கும்.
முன்பதிவுத் தொகை செலுத்திப் பதிவு செய்துகொள்ள கடைசி நாள் 15.11.2009.
இரண்டு தவணைகளில் முன்பதிவு செய்துகொள்ள விரும்புவோர் முதல் தவணையை (2000 உருவா) 15.11.2009 இலும், இரண்டாம் தவணையை(1800 உருவா) 15.12.2009 இலும் செலுத்தவேண்டும்.
வங்கி வரைவோலையாகத் தொகையை அனுப்ப விரும்புவோர் (Bank Draft) PERIYAR E.V.RAMASAMY-NAGAMMAI EDUCATIONAL AND RESEARCH TRUST என்று ஆங்கிலத்திலோ பெரியார் ஈ.வே,இராமசாமி -நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை எனத் தமிழிலோ வரைவோலை எடுத்து,
திரு.வே.ஆனைமுத்து, தலைவர்
பெரியார்-நாகம்மை அறக்கட்டளை,
19, முருகப்பா தெரு,
சேப்பாக்கம்,சென்னை-600005, இந்தியா
என்னும் முகவரிக்கு அனுப்பலாம்.
தொலைபேசி எண்: + 91 44 2852 2862
Kommentar veröffentlichen